Thursday, May 29, 2014

நரேந்திர மோடியின் அமைச்சர்களின் இலாகாக்கள் முழு விபரம்..!

பிரதமர் நரேந்திர மோடி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தித் துறை, விண்வெளி மற்றும் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகள் உள்ளிட்ட துறைகளை தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.
கேபினட் அமைச்சர்கள் :
1.ராஜ்நாத் சிங் – உள்துறை அமைச்சகம்.
2.அருண் ஜேட்லி – நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
3.சுஷ்மா ஸ்வராஜ் – வெளியுறவு அமைச்சகம்.
4.வெங்கய்ய நாயுடு – நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை.
5.கோபிநாத் முண்டே – பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்
6.ராம் விலாஸ் பாஸ்வான் – நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை.
7.நிதின் கட்கரி – போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை.
8.மேனகா காந்தி – பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை.
9.கல்ராஜ் மிஸ்ரா – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.
10.நஜ்மா ஹெப்துல்லா – சிறுபான்மை விவகாரத்துறை.
11.ஆனந்த் குமார் – ரசாயனம் மற்றும் உரத்துறை.
12.ரவிசங்கர் பிரசாத் – தொலைதொடர்பு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை.
13.ஆனந்த கீதே – கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை.
14.உமா பாரதி – நீர் வள மேலான்மை.
15.அசோக் கஜபதி ராஜூ – விமான போக்குவரத்துத் துறை.
16.ஹர்சிம்ரத் கவுர் பாதல் – உணவு பதப்படுத்துதல் துறை.
17.நரேந்திர சிங் தோமர் – சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலை வாய்ப்புத் துறை.
18.ஜூவல் ஓரம் – பழங்குடியின் விவகாரத்துறை
19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை
20.ஸ்மிருதி இராணி – மனித வள மேம்பாடு
21.ராதா மோகன் சிங் – விவசாயம்
22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி
23. சதானந்த கவுடா – ரயில்வே அமைச்சர்
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) :
1. ஜெனரல் வி.கே.சிங் – வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை.
2. இந்திரஜித் சிங் ராவ் – திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்
3. சந்தோஷ் கங்க்வார் – ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்
4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் – கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
5. தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
6. சர்வானந்த சோனோவல் – விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு
7. பிரகாஷ் ஜவடேகர் – தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை.
8. பியுஷ் கோயல் – மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
9. ஜிதேந்திர சிங் – அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை
10. நிர்மலா சீதாராமன் – வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.
இணை அமைச்சர்கள் :
1. ஜி.எம்.சித்தேஸ்வரா – விமான போக்குவரத்துத் துறை
2. மனோஜ் சின்ஹா – ரயில்வே துறை
3. நிஹால் சந்த் – ரசாயனம் மற்றும் உரத் துறை.
4. உபேந்திர குஷ்வாஹா – ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை.
5. பொன்.ராதாகிருஷ்ணன் – கனரக தொழில்துறை.
6. கிரண் ரிஜிஜு – உள்துறை.
7. கிரிஷன் பால் குர்ஜார் – சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை.
8. சஞ்சீவ் குமார் பாலியான் – விவசாயம், உணவு பதுப்படுத்துதல் துறை.
9. மன்சுக்பாய் வாசவா – பழங்குடியின விவகாரத் துறை.
10. ராவ் சாஹிப் தான்வே – நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை.
11. விஷ்ணுதேவ் சாய் – சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை.
12. சுதர்சன் பகத் – சமூக நீதித் துறை.
-நெட்டில் சுட்டது 

அது என்ன 370வது பிரிவு



'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு, 370ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தில் மாற்றம் செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது' அது என்ன 370வது பிரிவு


இது தான் '370'



*நாட்டின் பிற மாநிலத்தவர், ஜம்மு - காஷ்மீரில் நிலம், சொத்துகள் வாங்க முடியாது.

*ஜம்மு - காஷ்மீர் பகுதியை, 1947ல், இந்தியாவுடன் இணைப்பதற்காக, அப்போதைய மன்னர் ஹரிசிங் வேண்டுகோளின் படி, அரசியல் சாசன சிறப்பு பிரிவு, 370 ஏற்படுத்தப்பட்டது.


*ஒட்டுமொத்த இந்திய சட்டம், இங்கு செல்லுபடியாகாது. ராணுவம், வௌ?யுறவு, தகவல் தொடர்பு போன்ற சட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
*புதிதாக சட்டம் ஏதும் நிறைவேற்ற வேண்டுமானால், மாநில அரசின் ஒப்புதல் அவசியம்.


*இந்த பிரிவை திருத்த வேண்டுமானால், அரசியல் நிர்ணய சபையை கூட்டம் வேண்டும்.


*மாநில சட்டசபையின் ஒப்புதல் படியே, எந்த சட்டமும் இந்த மாநிலத்தில் செல்லுபடியாகும்.

-நன்றி தினமலர் 

Wednesday, May 28, 2014

சுஜாதாவுடனான எனது முதல் சந்திப்பு - By SKP

சுஜாதாவை பற்றி SKP  எழுதியது :-

சுஜாதாவுடனான எனது முதல் சந்திப்பு இது.

எனது கல்லூரியின் முதல் வருடம் முடி யும் நேரத்தில், பல்கலைக்கழகம் முழுவதும் நடந்த ஏதோ ஒரு வேலை நிறுத்தத்தால் திடீர் விடுமுறை கிடைத்தது. ஊருக்கு திரும்புவதற்காக பெங்களூர் வந்து விட்டு, வழக்கம் போல எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோட்டில் அலைந்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் இரவு ஏழு மணிக்கு மேல்தான் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் தமிழ்நாட்டுக்கு வண்டிகள் கிளம்பும்.
ஒரு சோம்பலான மதியப் பொழுதில் கப்பன் பார்க்கில் திரிந்து கொண்டிருக்கும் போதுதான் அந்த பியட் காரைப் பார்த்தேன். காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து பக்கத்தில் இருப்பவரிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தது சாட்சாத் சுஜாதா! எனக்கு மூச்சு சற்று நேரம் நின்று விட்டது. உண்மையில் கையும் ஓடவில்லை! காலும் ஓடவில்லை! காருக்கு பின்னாலேயே தயங்கி நின்று கொண்டிருந்தேன்.
நீண்ட நேரம் நின்று கொண்டு காரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை ரியர்வியூ கண்ணாடி வழியே சுஜாதா கவனித்து விட்டார். தனது பக்க கதவைத் திறந்து கைகளால் என்னை அழைத்தார். அருகில் சென்ற என்னிடம், “ என்னப்பா வேண்டும்! இப்படி முறைத்து பார்த்துக் கொண்டேயிருக்கிறாயே?” என்றார்.

“இல்லை சார்! நான் உங்கள் ரசிகன். ஒரு ஆட்டோ கிராஃப் வேண்டும்” என்றேன்.

“சரி! பேப்பர், பேனா கொடு” என்று கேட்ட பிறகுதான் எனக்கு உறைத்தது. என்னிடம் இரண்டுமே இல்லை! பின்னே! காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிற்றே!
“இதோ வாங்கி வருகிறேன் சார்” என்று சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.
பெங்களூர் அவ்வளவாக பரிச்சயம் இல்லாத 1987-ம் வருடம் அது. கப்பன் பார்க்கில் இருந்து தவறான வழியில் விதான் சவுதா வழியே வெளியே வந்து விட்டேன். அங்கு மருந்துக்குக்கூட ஒரு கடை இருக்காது. பதட்டத்தில் ஓடிக் கொண்டேயிருந்தேன். ஒரு வழியாக சில கிலோமீட்டரில் கனரா வங்கி தலைமையகம் அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் பேப்பர், பேனா வாங்கிக் கொண்டு மீண்டும் கப்பன் பார்க் நோக்கி வேகமெடுத்தேன். எத்தனை நேரம் ஓடினேன், எவ்வளவு தூரம் ஓடினேன் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது.

கப்பன் பார்க் உள்ளே நுழைந்து, அந்த பியட் கார் அங்கேயே நிற்பதை பார்த்த பின்புதான் கொஞ்சம் ஓட்டம் தளர்ந்தது. என் கையிலிருந்த பேப்பர் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. பையில் இருந்த ஒரு துண்டில் முகத்தை துடைத்துக் கொண்டு, மூச்சு சற்று ஆசுவாசப்பட்ட பின்பு மீண்டும் காரின் பின்னே காத்திருத்தல் ஆரம்பமாயிற்று.

கொஞ்ச நேரத்தில் என்னை கவனித்து மீண்டும் கையசைத்து கூப்பிட்டார். நான் வியர்வை பொங்க டிரைவர் இருக்கையின் அருகே சென்றேன். இம்முறை கையில் பேப்பரும் பேனாவும் இருந்தது. ‘ கொடு அதை!’ என்று என்னிடம் வாங்கிக் கொண்டு அருகில் இருப்பவரிடம் அந்த பேப்பரையும் பேனாவையும் கொடுத்தார்.

“கமல்! ஒரு பையனுக்கு உன்னோட ஆட்டோகிராஃப் வேணுமாம்... பாரு! ரொம்ப நேரம் வெயிட் பண்றான்” என்று சொன்ன பின்புதான் நான் கவனித்தேன். அவர் அருகில் அமர்ந்து கொண்டிருந்தது நடிகர் கமலஹாசன்!
கமல் அந்த பேப்பரில் ஆட்டோகிராஃப் போடும் வேளையில், நான் சுஜாதாவிடம் சற்று சத்தமாகவே சொன்னேன். “இல்லையில்லை! எனக்கு உங்கள் ஆட்டோகிராஃப்தான் வேண்டும்” என்று!

சில நொடிகள் அங்கு ஒரு அமைதி. சுஜாதா லேசாக அதிர்ந்து விட்டார். கமல் உடனே சுதாரித்துக் கொண்டு, “சார்! நான் சொன்னேன் இல்லையா? இப்போதெல்லாம் நீங்கள்தான் எங்களை விட பாப்புலர்!” எனக் கூறிக் கொண்டே பேப்பரை சுஜாதாவிடமே தந்து விட்டார். சுஜாதா எதுவும் எழுதாமல் ரங்கராஜன்/ சுஜாதா என்று வெறுமனே கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தார்.

அந்த ஆட்டோகிராஃபை சட்டையில் வைத்துக்கொண்டு, அன்று முழுதும், கப்பன் பார்க் முழுக்க கெத்தாக நடந்து கொண்டேயிருந்தேன். அப்போதே நான் கமல் ரசிகனும்தான். ஆனால், சுஜாதாவிற்கு முன்பு வேறு எந்த ஆளுமையும் என்னை அந்த அளவிற்கு பாதித்திருக்கவில்லை.

இருபது வருடம் கழித்து, நானும் நண்பர் பவா.செல்லதுரையும் ஒரு மாலைப் பொழுதில் சுஜாதாவை சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போதெல்லாம், அவர் சென்னைக்கே வீடு மாற்றி வந்து விட்டிருந்தார். அவரை பார்க்கப் போகிறோம் என்றவுடன், எங்கள் நண்பர் திலகவதி ஐபிஎஸ், தானும் வருவதாக சொல்லி உடன் வந்தார்.

நீண்ட நேர சுவாரஸ்யப் பேச்சுக்கு பின், அவரிடம் நான் அந்த முதல் சந்திப்பைக் குறிப்பிட்டு சொன்னேன். சட்டென்று அங்கும் ஒரு அமைதி! பின் ‘அது நீங்கதானா?’ என்றவர் அந்த சம்பவத்திற்கு பின்புதான் தானும் ஒரு பிரபலம் என்பதை நம்பவே ஆரம்பித்தேன் என்றார். கமல் இன்னமும் அதை நினைவில் வைத்திருக்கிறார் என்று ஒரு கூடுதல் தகவலும் கொடுத்தார்.
“இன்ஜினியரிங் படிக்க பெங்களூருக்கு ஏன் வந்தீர்கள்? மார்க் குறைவா?” என்றார். மார்க்கை சொன்னேன். “தமிழ்நாட்டி லேயே கிடைத்திருக்குமே? பின் ஏன் பெங்களூர்”என்றார்.
“உங்களால்தான் சார்!” என்றேன்.
“வாட்!”
“ஆமாம் சார்! நீங்கள் பெங்களூரில் இருந்தீர்கள். அங்கே படித்தால் உங்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமே? அதனால் தான் பிடிவாதம் பிடித்து அங்கே வந்தேன்.”
“நீங்கள் மேலும், மேலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறீர்கள்!” என்றவர், “பின்பு ஏன் என்னை பெங்களூர் வீட்டுக்கு வந்து பார்க்காமல், இந்த கப்பன் பார்க் விளையாட்டெல்லாம்?” என்றார்.

நீங்கள்தானே சார், அப்போது எழுதியிருந்தீர்கள்! “உண்மையான ரசிகர்கள் கடிதம் போடுகிற அல்லது நேரில் வந்து பார்க்கிற ஜாதியில்லை என்று?” என்றேன்.

சட்டென அதிர்ச்சியுற்று, பின் நீண்ட நேரம் மவுனமாக இருந்து விட்டு, வீட்டினுள்ளே திரும்பி, “சுஜாதா! இங்கே வா! இன்னுமொரு சுவாரஸ்யமான ரசிகன் எனக்கு” என்று அவரின் மனைவியை அழைத்தார். 

ஒரு நிமிடக் கதை- சிரிப்பொலி -- படித்ததில் பிடித்தது

நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.
‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.
சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.
மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.
‘சே....இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே’ என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது. இன்று மதியம் இவன் பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவ ஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.
நடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன் ‘மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும்’ என்று நினைத்தபடி சிறிது நேரம் நின்றான்.
இப்போது சிரிப்பொலியை காணோம். மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான். கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.
“என்னங்க.... சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல”
“மழை வேற... கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்”
“அதாங்க.... வரும்போது மெழுகுவர்த்தி வாங்கி வரச் சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா?”
“இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே”
“நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல....”
“இல்ல... நீ போன் போடவே இல்ல... நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்.”
“இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான். அதான் ஏதும் ஆச்சோ... எதுக்கும்... நீங்க போன எடுத்து பாருங்க தெரியும்.”
“அப்பா நான் ஒண்ணும் பண்ணல. ரிங் டோன் தான் மாத்திவச்சேன்” என்றான் அவன் மகன்.
“எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்."

போன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி


--நன்றி தி ஹிந்து 

கேபினட் அமைச்சர், இணை அமைச்சர் வேறுபாடு என்ன?

மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு), இணை அமைச்சர்கள் என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. இந்த மூன்று பிரிவுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. இவையல்லாமல் துணை அமைச்சர் என்ற அந்தஸ்தில் சிலரை நியமிக்கவும் சட்டம் இடம் தருகிறது. ஆனாலும் பெரும்பாலும் இந்தியாவில் அப்படி நியமிப்பதில்லை.

கேபினட் என்பது, 'மத்திய அரசுக்குள் ஒரு குட்டி அரசு' என்று சொல்லத்தக்க வகையில் சக்திவாய்ந்த உயர் அதிகார அமைப்பாகும். கேபினட்டில் முக்கியமான துறைகளின் அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த அமைச்சர்கள் பெரும்பாலும் மூத்தவர் களாகவும் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் வாய்க்கப்பெற்றவர் களாகவும் இருப்பார்கள். அரசியல், சட்டம், தொழில்நுட்பம், வேளாண்மை, வாணிபம், ராணுவம், வெளியுறவு, தொழில்துறை ஆகியவற்றில் தனிச் சிறப்பு பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் கேபினட் அமைச்சர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளைத் தங்கள் வசம் வைத்திருப்பார்கள். அவர்களுடைய துறை பெரியதாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு இணை அமைச்சர்களை உதவிக்கு அமர்த்திக்கொள்வார்கள்.

இணை அமைச்சர்களில் ‘தனிப்பொறுப்பு' உள்ளவர்களும் உண்டு. குறிப்பிட்ட சில துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நினைத்தால் அதை மட்டும் தனியாகப் பிரித்து, இணை அமைச்சரின் தனிப்பொறுப்பில் விடுவது உண்டு. சிவில் விமானப் போக்குவரத்து போன்ற துறைக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் வேண்டாம் என்று நினைத்தால் தனிப்பொறுப்பாக ஒரு இணை அமைச் சரிடம் தருவது உண்டு.

கேபினட் அமைச்சர்கள் சில வேளை களில், அவர்களுக்கென்று ஒதுக்கிய துறை போக, பிரதமரின் வேண்டுகோளின்பேரில் மற்றொரு துறையையும் கூடுதலாக வகிப்பதும் உண்டு. சக கேபினட் அமைச்சர் வெளிநாடு செல்லும்போதோ, உடல் நலக்குறைவால் சிகிச்சை பெறும்போதோ இப்படி கூடுதல் பொறுப்பை வகிப்பார்கள். அமைச்சரவையிலிருந்து யாராவது விலக நேர்ந்தால் தற்காலிக ஏற்பாடாக அந்தத் துறையை இன்னொரு அமைச்சரிடம் கூடுதல் பொறுப்பாகவும் தருவார்கள்.

கேபினட்டில் இடம் பெற்ற அமைச் சர்கள் மட்டுமே கேபினட் கூட்டங்களில் பங்கேற் பார்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே, இணை அமைச்சர்கள் கேபினட் கூட்டங்களுக்கு விசேஷமாக அழைக்கப் படுவார்கள்.
கேபினட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அந்தந்தத் துறைக்கு உரிய அமைச்சர்கள் மட்டுமின்றி இதர அமைச்சர்களும் கருத்துகளைத் தெரிவிப் பார்கள். கேபினட் கூட்டத்தில் நடக்கும் விவாதங்களும் எடுக்கப்படும் முடிவுகளும் முறையாகப் பதிவு செய்யப்படும்.

இணை அமைச்சர்களில் தனிப் பொறுப்பு என்று அறிவிக்கப்படுகிறவர்கள் தங்களுடைய துறை தொடர்பான எல்லா முடிவுகளையும் அவர்களே எடுப்பார்கள். பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் அவர் கள் செயல்படுவார்கள்.
தனிப்பொறுப்பல்லாத இணை அமைச் சர்கள், தத்தமது துறையின் கேபினட் அமைச்சரின் வழிகாட்டலின்படி தங் களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். இவர்களை 'அதிகாரம் இல்லாத அமைச்சர்கள்' என்று அரசியல் வட்டங்களில் கேலி செய்வார்கள். சில மூத்த அமைச்சர்கள் இணை அமைச் சர்கள் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்பு களை அளித்து நன்றாகத் தயார் செய்வார் கள். வேறு சிலரோ அவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். சில இணை அமைச்சர்கள் தாங்கள் உட்கார மேஜை, நாற்காலிகூட இல்லை என்று கேபினட் அமைச்சர்களிடமே முறையிட்டதும் உண்டு.

நாடாளுமன்றக் கூட்டங்களில் கேபினட் அமைச்சர் அவைக்கு வர முடியாத சந்தர்ப்பங்களில், இணை அமைச்சர்கள், கேள்விகளுக்குப் பதில் அளிப்பது உண்டு. அரசியல் காரணத்துக்காக ஒருவருக்கு கேபினட் அந்தஸ்து தரப்படுவதும் அவருக்காக அந்தத் துறையின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பை இணை அமைச்சரே மேற்கொள்வதும் சமீபத்தில்கூட நடந்திருக்கிறது. நாடாளு மன்றத்தில் கேள்வி நேரத்தில் பதில் சொல்லும் பொறுப்பை கேபினட் அமைச் சருக்குப் பதிலாக இணை அமைச்சரே சொல்ல நேர்ந்திருக்கிறது.

இணை அமைச்சர்கள் துறைக்கும் கேபினட் அமைச்சருக்கும் பாலமாக இருந்து செயல்படுவார்கள். நாடாளு மன்றப் பணிகளிலும் அவருக்கு உதவுவார் கள். அதன் மூலம் அவர்களும் நிர்வாகப் பயிற்சியைப் பெறுவார்கள்.

இணை அமைச்சர்களாக நியமிக்கப் படுகிறவர்கள் பெரும்பாலும் இளைஞர் களாகவோ, அமைச்சர் பொறுப்புக்குப் புதியவர்களாகவோ இருப்பார்கள்.
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்ற இணையமைச்சர் அந்தஸ்தில் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆட்சி யிலும் இப்படியொரு இணையமைச்சர் இருந்தார்.

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் களில் (மக்களவை, மாநிலங்களவை) சுமார் 10% வரையிலான எண்ணிக்கையில் மத்திய அமைச்சரவை இருக்கலாம் என்று நிர்வாக சீர்திருத்தக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. அதே சமயம் மொத்தம் எத்தனை துறைகள் இருக்கலாம், எத்தனை கேபினட் அமைச்சர்கள் இருக்கலாம், எத்தனை இணை அமைச் சர்கள் இருக்கலாம் என்றெல்லாம் அது பரிந்துரைக்கவில்லை. இவை அனைத்தும் பிரதமரின் விருப்ப அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் உள்பட்டவை.


கேபினட் அமைச்சர்களைவிட இணை அமைச்சர்களுக்கு ஊதியம், படிகள், சிறப்புச் சலுகைகள் போன்றவை குறை வாகவே இருக்கக்கூடும். கேபினட் அமைச் சர்களுக்கு பங்களா, கார் போன்ற வசதிகளும் அதிகமாகவே இருக்கும். அரசியல்ரீதியாகவும் கேபினட் அமைச்சர் களுக்கு செல்வாக்கு அதிகம். இருப் பினும் இணை அமைச்சர்கள் நாடாளு மன்ற ஜனநாயகத்தின் இன்றிய மையாத அம்சமாகிவிட்டார்கள். கேபினட் அமைச் சர்களை அணுக முடியாதவர்கள் இணை அமைச்சர்களை எளிதில் அணுக முடியும்

- நன்றி  தி இந்து 

Sunday, May 25, 2014

இந்திய தாயின் தலைமகன்

ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. ஜனநாயகத்தில் அனைத்து மக்களும் சமம்; மக்களே ஆட்சியாளர்களை தேர்வு செய்வர். இதன் படி சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, துணிச்சலான முடிவு, நேர்மறை எண்ணம் ஆகியவற்றால் நாட்டின் 14வது பிரதமராக இன்று பதவி ஏற்கிறார்.இந்தியாவின் மேற்கில் குஜராத்தின் மேஹ்சனா மாவட்டத்தின் வத்நகரில் 1950, செப்.17ம் தேதி, நடுத்தர குடும்பத்தில் மோடி பிறந்தார். இவரது பெற்றோர் தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி -ஹீரா. பள்ளியில் படிக்கும் போதே "அகில் பாரதிய வித்யார்தி பரிஷத்' அமைப்பில் இணைந்து ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள், அரசியல் தொடர்பான கூட்டங்களில் அதிகமாக பங்கேற்கத் தொடங்கினார். இளம் வயதில் சகோதரருடன் இணைந்து "டீ' கடை நடத்தினர். ரயில் நிலையங்களில் டீ விற்றார். குஜராத் பல்கலைக்கழகத்தில் "அரசியல் அறிவியலில்' முதுநிலை பட்டம் பெற்றார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.

பொறுப்புகளுக்கு அசராதவர்



1987ல் பா.ஜ., வில் சேர்ந்தார். 1995ல் ஐந்து மாநிலங்களுக்கு பா.ஜ., தேசிய செயலராக நியமிக்கப்பட்டார். பின் 1998ல் குஜராத் மற்றும் இமாச்சலில் நடந்த தேர்தலில், பா.ஜ., ,சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, அப்போதைய பா.ஜ., தலைவர் அத்வானியால் நியமிக்கப்பட்டார். இப்பணியை திறம்பட செய்து முடித்தார். குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் 2001 அக்., 6ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து எம்.எல்.ஏ., வாக கூட இல்லாத மோடி அக்., 7ல், முதல்வராக பதவியேற்றார். பின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
"ஹாட்ரிக்' வெற்றி



மோடி முதல்வராக பதவியேற்ற போது, பூகம்பத்தின் பாதிப்பால் மாநிலம் பின் தங்கிய நிலையில் இருந்தது. பின் அடுத்தாண்டு நிகழ்ந்த வன்முறை சம்பவமும் மாநில வளர்ச்சியில் தடைக்கல்லாக அமைந்தது. இருப்பினும் தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்கு பார்வையின் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட இவர், நாட்டிலேயே குஜராத்தை பல துறைகளிலும் முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டினார். 2002 , 2007, 2012 என தொடர்ந்து வெற்றி பெற்று, 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவரே. 

காந்திநகர் டூ டில்லி



2012 சட்டபை தேர்தல் வெற்றி விழாவில் பங்கேற்ற தொண்டர்கள், இவரை "அடுத்த பிரதமர்' என்று கோஷமிட்டனர். அவர்களின் நம்பிக்கையின் படி, 2013 செப்., 13ம் தேதி, கோவாவில் பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து தனது பணியை தொடங்கினார். இடைவிடாத பிரசாரம் மூலம் கோடிக்கணக்கான மக்களை சந்தித்தார். சாதாரணமாக இருந்த 2014 அரசியல் களம், மோடி அலையாக மாறியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை "நமோ' கோஷம் ஒலித்தது. மே 16ல் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. நாட்டு மக்களின் நம்பிக்கையுடன் மோடி இன்று பிரதமராகிறார். 

மோடியின் இரு தாய்கள்



தனது தாய் ஹீராபென் மீது மிகுந்த பாசம் கொண்டவர் மோடி. புதிய பணி; புதிய பொறுப்பு என எதுவாக இருந்தாலும் இவரிடம் ஆசி பெற்றுத் தான் எந்த ஒரு பணியையும் செய்வார். இவரது இரண்டாவது தாயான இந்தியா மீதும் அளவு கடந்த நேசம் வைத்துள்ளார். இவர் தேர்தல் பிரசாரத்தில் கூட தாய்நாட்டுக்கு ஓட்டளியுங்கள் என்று தான் கேட்டார். நாட்டுப்பற்றுமிக்கவராக திகழ்கிறார்.

முதன்முறை



1.இந்திய சுதந்திரத்துக்கு பின் பிறந்த ஒருவர், பிரதமராவது இதுவே முதல் முறை. 
2.இதற்கு முன் லோக்சபாவிலோ, ராஜ்யசபாவிலோ எம்.பி.,ஆக இல்லாமல், முதன்முறையே பிரதமராக பார்லிமென்ட்டுக்கு செல்லும் முதல் நபர்.
3.பிரதமர் பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை. 
4.கூட்டணி கட்சிகள் தயவின்றி, பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை.

மோடி "10'



1.உலக வரைபடத்தில் உலகின் பசுமையான தலைநகரம் என்ற பெருமையை குஜராத்தின் காந்திநகருக்கு பெற்றுத்தந்திருக்கிறார். இங்குள்ள சூரத் நகரம் உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் நகரம் என்ற பெயர் பெற்றுள்ளது. பல தொழில்முனைவோர்களையும் ஈர்த்துள்ளது. 
2.10 ஆண்டுகளுக்கு முன் உலக வங்கியில் குஜராத், 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தது. ஆனால் இன்று அதே உலக வங்கியில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 
3.உலகிலேயே 2வது சிறந்த மாநிலம் என்ற விருது ஐ.நா., சார்பில், குஜராத்துக்கு 2010ல் வழங்கப்பட்டது. 
4.புத்தகம் எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவர் மோடி. புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வமிக்கவர். 
5.மோடி, "இரும்பு மனிதர்' சர்தார் படேலின் தலைமைப் பண்பையும், சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளையும் பின்பற்றுகிறார். 
6.பள்ளிப்படிப்பை முடித்த பின், ராஜ்கோட் ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் மேற்கு வங்கத்தின் பேலூர் மடம் ஆகியவற்றுக்கு சென்றார். பின் 2 ஆண்டுகள் இமயமலையில் சாதுக்களிடம் "இந்துத்துவா' பற்றி கற்றார். "யோகாவும்' கற்றுள்ளார். 
7.15 வயதில் 1965ல் இந்தியா - பாக்., போரின் போது, ராணுவ வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் உதவினார். அதே போல 17 வயதில், 1967ல் குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, மீட்பு பணிகளில் ஈடுபட்டார். 
8.அமெரிக்காவில் "பப்ளிக் ரிலேஷன் அண்டு இமேஜ் மேனேஜ்மென்ட்' என்ற 3 மாத படிப்பை முடித்துள்ளார். மற்ற அரசியல்வாதிகளில் இருந்து வித்தியாசமாக இருப்பதற்கு இதுவும் ஓர் காரணம். 
9.இவரிடம் மது மற்றும் புகைப்பழக்கம் கிடையாது. இவர் ஒரு வெஜிடேரியன். சமையல் செய்யவும் தெரியும். 
10.மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குவார். முதல்வராக இருந்த போது காலை 7 மணிக்கு முதல்வர் அலுவலகத்துக்கு செல்வார். இரவு 10 அல்லது 12 மணிக்கு மேல் தான் வீடு திரும்புவார். கடின உழைப்பாளியாக திகழ்கிறார். 
-- நன்றி தினமலர்

ராஜபக் ஷேவுக்கு எதிர்ப்பு: மோடியின் ராஜதந்திரம் புரியாமல் நடக்கும் கூத்து

இந்தியாவின் புதிய பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்ளும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக் ஷேவை அழைத்திருப்பது, ஏதோ செய்யக் கூடாத காரியத்தை, மோடி தரப்பினர் செய்துவிட்டது போல், தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூச்சலிடுகின்றனர். அதுமுழுக்க முழுக்க தவறான விஷயம் என்பதை தெரிந்திருந்தும், அவர்கள் ஏன் அப்படி கூக்குரலிடுகின்றனர் என்பது புரியவில்லை.


சற்றும் பொருந்தாத விஷயம்


அதுவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று, மோடி ஆதரவு அலை, பா.ஜ.,வுக்கான ஓட்டு களையெல்லாம் பெற்றிருக்கும் ம.தி.மு.க.,வின் வைகோ, இந்த விஷயத்தில் மிகத் தீவிரமாக இருப்பது, சற்றும் பொருந்தாத விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது.நரேந்திர மோடி என்பவர், சாதாரண மனிதர் அல்ல. இந்தியா என்னும் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர். கிட்டதட்ட, 14 ஆண்டுகள், குஜராத்தின் முதல்வராகவும் இருந்தவர். அவர், எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என, சொல்கிறவர், செய்கிறவர் அல்ல.அவர் எதற்காக இதை செய்தார் என்கிற நிஜமான விவரங்களை, தமிழக பா.ஜ., உட்பட அகில இந்திய பா.ஜ.,வும் சரியாக சொல்லத் தவறியதால் தான், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், தமிழ் அமைப்புகளின் பெயர்களில், ஆங்காங்கே சின்ன சின்ன சலசலப்புகள் ஏற்பட்டன.நரேந்திர மோடி மிகப் பெரிய சாணக்கியத்தனத்தோடு தான், தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளின் அதிபர்களுக்கு, தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தியாவை சுற்றிலும் இருக்கும் எல்லா நாடுகளுமே, இந்தியாவோடு நட்புறவோடு தான் இருக்கின்றன என்று எடுத்துக் கொள்ள முடியாது.

தொலைநோக்கு பார்வை


நட்புறவோடு இல்லாத நிலைமையே தொடர்ந்தால், இந்தியாவில் நாமெல்லாம் நிம்மதியாக இருக்க முடியாது. ஆக, அப்படியொரு சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையோடு தான், நரேந்திர மோடி, தன் பதவியேற்பு விழாவுக்கு, பாகிஸ்தானின் நவாஸ் செரீப், இலங்கையின் ராஜபக் ஷே, ஆப்கானிஸ்தானின் கர்சாய் போன்றவர்களை அழைத்திருக்கிறார்.இப்படியொரு அழைப்பை நரேந்திர மோடி விடுத்ததும், முதலில் அவர்கள் என்ன மாதிரி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை கவனிக்கும் நோக்கம் தவிர, இப்படியொரு அழைப்பை விடுத்ததும், அந்தந்த நாடுகளில் இருக்கும் மக்கள் என்ன மாதிரி ரியாக்ட் செய்கின்றனர் என்பதையும் பார்க்க மோடி விரும்பினார்.

ராஜ தந்திரமான செயல்


அதேபோல, அங்கிருக்கும் தீவிரவாத குழுக்களும், அரசாங்க எதிர்ப்பு குழுக்களும் எப்படி, இந்த அழைப்பை எதிர் கொள்கின்றன என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பினார் மோடி. அதோடு, இந்தியாவின் நட்பு எல்லைக்குள் இல்லாத சீனாவுக்கு அழைப்பு விடுக்க விரும்பாத மோடி, இவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்திருப்பது, ராஜ தந்திரமான செயல். அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகளின் அதிபர்கள், இந்தியாவின் அழைப்பை ஏற்கவில்லை என்றால், அவர்கள் சீனாவின் கைப்பாவையாக செயல்படுவதும், அல்லது சீனாவின் கண் அசைவில் செயல்படுவதும், கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக எடுத்துக் கொள்ளலாம். தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், இந்த மாதிரி விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தி, அதை உடைக்க வேண்டும் எனவும் விரும்பினார். அப்படியெல்லாம் நாட்டின் எதிர்கால நலனுக்காக திட்டமிட்டு, காரியமாற்ற ஆரம்பித்திருக்கும் மோடியின் நேர்மையான, ராஜ தந்திரமான, கூர்மையான செயல்பாடுகள் புரியாமல், குறுகிய எண்ணங்களோடு இங்கிருப்பவர்கள் குரலெழுப்பினால், அதை யாரும் பொருட்படுத்த வேண்டியதில்லை.இப்படித் தான் இலங்கை, சீனாவின் கரங்களுக்குள் சென்று கொண்டிருக்கிறது என்றதும், ஒரு காலத்தில் சர்வ பலத்துடன் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்ததோடு, அண்டை நாடுகள் மிரளும் வகையில், ஆட்சியில் இருந்த பிரதமர் இந்திரா, இலங்கையில் அரசுக்கு எதிராக தீவிரவாத குழுக்களை உருவாக்கினார். அந்த குழுக்களுக்கு, இந்தியாவில் வைத்து பயிற்சியும் கொடுக்கச் செய்தார்.அந்த பிரச்னை தான், பெரிய அளவில் வளர்ந்து பல ஆண்டுகளுக்கு, இலங்கையின் நிம்மதியை மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியையும்குலைத்துப் போட்டது. அதெல்லாம், இன்றைய இலங்கை அதிபர் ராஜபக் ஷேக்கு மிக நன்றாக தெரியும்.

பயந்தார்...


நரேந்திர மோடி, இந்திராவை விட இரும்பு மனிதராக இருந்து செயல்படக் கூடியவர் என்பது, ராஜபக் ஷேவுக்கு நன்கு தெரியும். இதெல்லாம் தெரிந்து தான், பதவியேற்பு விழாவை புறக்கணித்து, ஆரம்பத்திலேயே இந்தி யாவில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசோடு நெருடலை ஏற்படுத்திக் கொண்டால், அது பழைய படியே பிரச்னையை ஏற்படுத்தி விடும் என பயந்தார் ராஜபக் ஷே.அதனால் தான், அவர் நரேந்திர மோடியிடம் இருந்து அழைப்பு என்றதும், வருகை தர உடனே ஒப்புக் கொண்டு விட்டார். அதேபோல், இலங்கையில் யார் அதிபராக இருந்தாலும், பின்னணியில் இருந்து ஆட்சி பரிபாலனத்தை நடத்திக் கொண்டிருக்கும் புத்த பிட்சுக்களும், இந்த ஆபத்தை உணர்ந்தே இருக்கின்றனர். அதனால், அவர்களும், ராஜபக் ஷேவின் இந்திய பயணத்துக்கு 
பச்சைக்கொடி காட்டி விட்டனர்.

புரியாமல் போனது எப்படி?


இதேபோலத் தான், நவாஸ் செரீப் விஷயத்திலும் நடக்கிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக இருக்கும், தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, நரேந்திர மோடியின் பதவியேற்பு அணுகுமுறையை வரவேற்றிருக்கிறார். அதேபோல், அந்த மாநிலத்தின் பிரதான இயக்கமான ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபாவும் வரவேற்றிருக்கிறார். ஆக, அவர்கள் எல்லாம் புரிந்து கொண்ட, ஒரு ராஜதந்திரமான நடவடிக்கை, ம.தி.மு.க.,வின் வைகோவுக்கும், இங்கிருக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் புரியாமல் போனது எப்படி என்றுதான் தெரியவில்லை.வைகோவை பொறுத்த வரையில்,அவர் உணர்ச்சிவசப்பட்டு அரசியல் செய்கிறாரே தவிர, நீண்ட கால பார்வையோடு அரசியல் செய்யவில்லை. தமிழ் அமைப்புகள், ராஜபக் ஷே வருகையை காரணம் காட்டி மோடியை எதிர்ப்பதால், அவர்கள் இழக்கப் போவது எதுவுமில்லை.

அரசியல் வாழ்க்கைக்கு சூன்யம்


ஆனால், அரசியலில் தனித்து விடப்பட்டு தொடர் தோல்வியில் இருக்கும் வைகோ, ராஜபக் ஷே வருகைக்கு எதிராக போராட்ட அரசியல் நடத்துவது, அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு அவரே வைத்து கொள்ளும் சூன்யம்.அது மட்டுமல்ல, இலங்கை தமிழர் பிரச்னையில், ரோட்டில் நின்று கூச்சலிடும் வெற்று கூட்டத்தால், எத்தனை காலமானாலும் தீர்வையோ, நல்லதையோ செய்ய முடியாது. அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் நரேந்திர மோடி, ராஜபக் ஷே போன்றவர்களால் தான்தீர்வை செய்ய முடியும் என்பதைதெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதுதான், தமிழர்களுக்கு அவர்கள் செய்யும் நல்ல காரியமாக இருக்கும்.காஷ்மீர் அரசியல்வாதிகள் ஒன்றும் தெரியாத முட்டாள்கள் அல்ல. அதனால் தான், நவாஸ் செரீப்பின் இந்திய வருகையை வரவேற்று விட்டனர். அவர்களுக்கு தெரிந்த அரசியலை, நம் தமிழினத் தலைவர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது?

-- நன்றி தினமலர்

Thursday, May 22, 2014

அன்று ஒரு சாமானியர் .. இன்று நாட்டின் பிரதமர்

நரேந்திர மோடி - வாழ்க்கை வரலாறு

குஜராத்தின் முதல்வராக, குஜராத்தில் நிறுத்த முடியாத, தடுக்க முடியாத வளர்ச்சிக்கு வித்திட்ட நாயகனாக கோடானு கோடி இதயங்களைக் கொள்ளை கொண்டவராக திகழ்கிறார் நரேந்திர மோடி.
·         விருதுகள்
·         சர்வதேச

முதல்வர் - ஒரு சாமானியர்

1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடக்கு குஜாத்தின், மேஹசனா மாவட்டத்தில் வத்நகர் என்ற குக்கிராமத்தில் பிறந்தார் நரேந்திர மோடி. தாராள மனது , பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, சமூக சேவையாற்றும் எண்ணம் ஆகிய சூழலின் கீழ் அவர் வளர்ந்தார். இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரின்போது, சிறு வயதில் இருந்த மோடி, படை வீரர்களுக்கு உணவு கொண்டு சென்று கொடுத்த குழுவில் இடம்பெற்றிருந்தார்.
1967ம் ஆண்டு, குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். சிறந்த நிர்வாக ஒருங்கிணைப்புத் திறமையைக் கொண்டிருந்த மோடி, மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவராகவும் விளங்கினார். அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பிலும், பல்வேறு சமூக அரசியல் இயக்கங்களிலும் பங்கெடுத்துள்ளார் மோடி.
சிறு வயது முதலே அவர் பல்வேறு தடைகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் போராடி வென்று வந்துள்ளார். தன் முன் இருந்த சவால்களை உடைத்து அவற்றை வாய்ப்புகளாக மாற்றி விடுவார். தனது குணாதிசயத்தின் பலத்தாலும், தைரியத்தாலும் முன்னேறியவர் மோடி. அவர் கல்லூரியிலும், பின்னர் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தபோது, அவரது பாதை நெடுகிலும் கடுமையான போராட்டங்களே நிரம்பியிருந்தன. ஆனால் வாழ்க்கைப் போராட்டத்தில் எப்போதுமே அவர் ஒரு போராளியாகவே திகழ்ந்தார். உண்மையான வீரராக பரிமளித்தார்.
ஒரு முறை அடியெடுத்து வைத்து விட்டால் அவர் திரும்பிப் பார்ப்பதே இல்லை. தோல்வியை அவர் ஏற்கவே மாட்டார். தோல்வியையே தழுவாதவரும் கூட. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து முதலில்தனது செயல்பாட்டைத் தொடங்கினார். அப்போது அவர் பல முக்கியப் பணிகளை ஆற்றியுள்ளார்.
1974ம் ஆண்டு நடந்த நவ்நிர்மான் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் அதில் ஒன்று. அதேபோல, 1975 முதல் 77 வரையிலான 19 மாத கால அவசர நிலைச் சட்டத்தின்போதும் அவர் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்றார்.இந்தக் கால கட்டம் முழுவதும் அவர் தலைமறைவாக இருந்து போராட்டங்களில் பங்கேற்றார்.
1987ம் ஆண்டு பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் இறங்கினார். அடுத்த ஒரு வருடத்திலேயே அவர் குஜராத் மாநில பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். அந்த சமயத்தில் அவர் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளராக பெயர் பெற்றிருந்தார். கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டி சரியான பாதையில் செலுத்தும் பணியை அவர் விரும்பி ஏற்று செயல்பட்டார்.
1990ம் ஆண்டு மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய பாடுபட்டார். இந்த நிலையில் குஜராத்தில் 1995ம் ஆண்டு பாஜாக மூன்றில் இரண்டு மடங்கு மெஜாரிட்டியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அன்று முதல் இன்று வரை பாஜகவே குஜராத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.
1988 முதல் 95 வரையிலான காலகட்டத்தில் மிகச் சிறந்த திட்டமிடுபவராக செயல்பட்டார் மோடி. குஜராத் பாஜகவை ஆளுங்கட்சியாக்க தேவையான அடிப்படைப் பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தவர் என்ற பெயரையும் பெற்றார். இந்த சமயத்தில் இரண்டு முக்கியமான தேசிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணியும் அவருக்கு வந்து சேர்ந்தது. அதில் ஒன்று சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான அத்வானியின் ரத யாத்திரை. அதேபோல கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான யாத்திரை.
1998ம் ஆண்டு டெல்லியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற இந்த இரண்டு யாத்திரைகளும்தான் முக்கியக் காரணம். இதை திறம்பட நடத்திக் காட்டியவர் மோடி.
1995ம் ஆண்டு பாஜகவின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டார் மோடி. ஐந்து முக்கிய மாநிலங்களின் பொறுப்பாளர் பணி அவருக்குத் தரப்பட்டது 1998ம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்தார். 2001 அக்டோபர் வரை இப்பொறுப்பை அவர் வகித்தார். அதன் பின்னர் அவர் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
தேசிய அரசியலி்ல அவர் இருந்தபோது, பல்வேறு மாநில கட்சி நிர்வாகங்களைக் கவனிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக முக்கியமான ஜம்மு காஷ்மீர் மாநில பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது. அதேபோல வட கிழக்கு மாநிலங்களின் பாஜக நிர்வாகங்களையும் அவர் கவனித்தார்.
தேசிய அளவில் பணியாற்றியபோது கட்சியின் முக்கியச் செய்தித் தொடர்பாளராகவும் விளங்கினார் மோடி. அப்போது அவர் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிட்டின.
இந்த காலகட்டத்தில் அவர் உலகம் முழுவதும் பல்வேறு பயணங்களை மேற்கொண்டு முக்கிய உலகத் தலைவர்களை சந்தித்துள்ளார். இந்த அனுபவம், அவருக்கு உலகளாவிய பார்வையைக் கொடுக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும், இந்தியாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கையையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
2001ம் ஆண்டு அக்டோபர் மாதம், குஜராத் மாநில பாஜக ஆட்சிக்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் மோடி. அக்டோபர் 7ம் தேதி மோடி தலைமையிலான அரசு பதவியேற்றபோது, குஜராத் மாநிலம் பொருளாதார சீர்குலைவில் இருந்தது. பல இயற்கைச் சீற்றங்கள், மிகப் பெரிய நிலநடுக்கம் போன்றவற்றால் பெரும் பாதிப்பில் இருந்தது குஜராத். இருப்பினும், மோடி, மிகச் சிறப்பாக செயல்பட்டு, தனது அனுபவத்தால், அத்தனை துயரங்களிலிருந்தும் குஜராத்தை மீட்டெடுக்க ஆரம்பித்தார்.
முதல்வராக அவர் பொறுப்பேற்றபோது அவர் முன் இருந்த மிகப் பெரிய சவால், 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள்தான். பூஜ் நகரம்தான் மிகப் பெரிய சீரழிவை சந்தித்திருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருந்தனர். எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை. ஆனால் இன்று பூஜ் நகரத்தை மிகச் சிறந்த நகரமாக மாற்றியுள்ளார் மோடி.
மறுசீரமைப்பும், மறுவாழ்வுப் பணிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், தொலை நோக்குப் பார்வையுடன் மறுபக்கம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார் மோடி. குஜராத் மாநிலம் எப்போதுமே தொழில் வளர்ச்சியை மட்டுமே பார்த்தபடி வளர்ந்து வந்தது. அதை மாற்றி, சமூக பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சமூக பொருளாதார வளர்ச்சியை சரிவிகித சமானத்தில் கவனிக்க ஆரம்பித்தார் மோடி.
இதன் விளைவாக உதித்ததுதான் பஞ்சம்ருத் யோஜனா. அதாவது ஐந்து முனை வளர்ச்சித் திட்டம் என்பதாகும்.
அவருடைய தலைமையின் கீழ், குஜராத் மிகப் பெரிய மாற்றத்தை பல்வேறு பிரிவுகளில் சந்தித்தது. கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. குஜராத் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு செயல்பட ஆரம்பித்தார் மோடி.நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைத்தார். இப்படி பல்வேறு பணிகள் மூலம் குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் நடை போட வைத்தார் மோடி.
முதல்வராகப் பதவிக்கு வந்த 100 நாட்களிலேயே அவரது தொலைநோக்கும், திறமையும், குறிக்கோள்களும் அனைவராலும் உணரப்பட்டன. இவை அனைத்தும் 2002 டிசம்பரில் குஜராத்தில் நடந்த பொதுத் தேர்தலில் இரட்டிப்புப் பலன்களைக் கொடுத்தன. மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது, பெரிய பலத்துடன். மொத்தம் உள்ள 182 இடங்களில் 128 இடங்களை மோடி அரசு கைப்பற்றியது.
இதே வெற்றி 2007 தேர்தலிலும் எதிரொலித்தது. மீண்டும் ஒரு சாதனை வெற்றியுடன் பாஜக, மோடி தலைமையில் குஜராத்தில் ஆட்சியைப் பிடித்தது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியுடன் 4000 நாட்களை மக்கள் பணியில் நிறைவு செய்தார் மோடி.
தொடர்ந்து மூன்று தேர்தலில் மக்களின் ஆசியுடன் ஆட்சியமைக்கும் அரிய வாய்ப்பையும் மோடி பெற்றார். 2002, 2007 தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து 2012ல் நடந்த பொதுத் தேர்தலிலும் குஜராத் பாஜக, மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. குஜராத் முதல்வராக நான்காவது முறையாக 2012, டிசம்பர் 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டார் மோடி.
இன்று மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டின் முன்னணி மாநிலமாக குஜராத் திகழ்கிறது. மின் ஆளுமை, முதலீடுகள், வறுமை ஒழிப்பு, மின்சார உற்பத்தி, பொருளாதார மண்டலங்கள், சாலை வசதிகள், நிதி ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குஜராத் முதன்மையான இடத்தில் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் குஜராத் வளரவில்லை. மாறாக, அனைத்து முக்கியத் துறைகளிலும், அதாவது விவசாயம், தொழில் மற்றும் சேவை என்று வளர்ந்துள்ளது. இந்த மாபெரும் வளர்ச்சிக்குப் பின்னால், மோடியின் சப்கா சாத், சப்கா விகாஸ் ஆகியவை உள்ளன. மக்களுக்காக, மக்களுக்கான நல்லாட்சி என்பதே மோடியின் தாரக மந்திரமாக உள்ளது.
அனைத்து அவ நம்பிக்கைளுக்கு எதிராகவும், நர்மதா அணையின் உயரம் 121.9 மீட்டராக உயர்த்தப்பட்டது. இந்த கட்டுமானத்திற்கு எதிராகப் போராடியவர்களை எதிர்த்து மோடியே உண்ணாவிரதம் இருந்தார். நீர்ப் பாதுகாப்புக்கு நர்மதா அணை ஒரு மிகப் பெரிய உதாரணமாகத் திகழ்கிறது.
சோயில் ஹெல்த் கார்ட், ரோமிங் ரேஷன் கார்டு, ரோமிங் ஸ்கூல் கார்டு போன்றவை சாதாரண மக்கள் மீது மோடிக்கு உள்ள அக்கறையைக் காட்டுவதாக உள்ளது.
அதேபோல கிரிஷி மகாத்சோவ், சிரஞ்சீவி யோஜனா, மாத்ரு வந்தனா, பேட்டி பச்சாவ், ஜோதிகிராம் யோஜனா, கர்ம்யோகி அபியான், இமம்தா, இஎம்பவர், ஸ்கோப், ஐகிரியேட் போன்றவை பன்னோக்கு வளர்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. இவையெல்லாம் அடுத்த தலைமுறையையும் சேர்த்து அக்கறைப்படும் மோடியின் திறமையான தலைமைத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
இளமையான சிந்தனைகளுடன் கூடிய தலைவராக மோடி திகழ்கிறார். தனது நோக்கத்தையும் குறிக்கோளையும் குஜராத் மக்களுக்கு அவர் தனது செயல்பாடுகள் மூலம் புரிய வைத்துள்ளார். 6 கோடி குஜராத்திகள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளார் மோடி. லட்சம் பேர் மத்தியில் பேசினாலும் மக்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அவரது ஞாபக சக்தி மக்களைக் கவர்ந்த விஷயமாகும். மக்களின் டார்லிங்காக அவர் திகழ்கிறார்.
ஆன்மீகத் தலைவர்கள் மீது அலாதிப் பற்று கொண்டவர் மோடி. இது மதத் தலைவர்கள் மத்தியில் நல்ல பெயரை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. மதப் பாகுபாடுபா பாராமல், அத்தனை மதத்தினரும் நரேந்திர மோடி அன்பும் பற்றும் வைத்துள்ளனர்.
சிறந்த பேச்சாளரான மோடி, பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதிலும் கில்லாடியும் கூட. கிராமப்புற மக்களின் அன்பையும், நகர்ப்புற மக்களின் அன்பையும் ஒரு சேரப் பெற்றவர்.
மோடியின் தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் உலக அளவில் குவித்துள்ளது. .நா. சசக்வா விருது அதில் ஒன்று. அதேபோல காமன்வெல்த் பொது நிர்வாக அமைப்பின் விருது, யுனெஸ்கோ விருது, மின் ஆளுமைக்கான சிஎஸ்ஐ விருது ஆகியவை அதில் சில. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் சிறந்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோடி.
குஜராத்தை உலக வரைபடத்தில் இடம் பெறவைத்தவர் மோடி. வைப்ரன்ட் குஜராத் நிகழ்வுகள் மூலம் குஜராத்தை அனைவரும் விரும்பும் முதலீட்டு மையமாக மாற்றியவர். 2013 வைப்ரன்ட் குஜராத் நிகழ்வானது 120 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஈர்த்தது. இது மிகப் பெரிய சாதனையாகும்.
கடந்த பல ஆண்டுகளாகவே குஜராத் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை தொடர்ந்து வருகிறது. மேலும் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. மறுபக்கம் மோடியின் அயராத பயணமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இலக்காக அவர் படிப்படியாக நடை போட்டு வருகிறார்.
அரசியலிலும் கூட அடிமட்ட அளவிலிருந்து உயர் பதவிக்கு வந்தது வரை அவர் சாதித்தவை ஏராளம்.. ஏராளம்.