ஜீவா படத்தை ரொம்பவும் தாமதமாக இப்பொழுதுதான் பார்த்தேன். படத்தின் கதை - பார்பனர்கள் கூட்டம் சேர்ந்து மற்ற ஜாதிக்கார்கள் கிரிக்கெட்டில்நுழைவதை முதுகில் பூணூல் இருக்கிறதா என்று தேடிப்பார்த்து தடுக்கிறார்கள் என்கிறார் டைரக்டர், இவ்வளவுதான் கதை, இது அவருக்கும் தெரிந்துஇருக்கிறது அதனால் தான் முன்பாதி, வளர்ப்புத்தந்தை, காதல்-பிரிதல் - சேர்தல் என்று ஒரு தனிக்கதை.

“ஆதலால் காதல் செய்வீர்” எடுத்த எங்க ஊர்காரரா என்று ஆயாசமாக இருக்கிறது. நெட்டில் தேடியதில் எதிர் குரலோ அல்லது கேட்க்கப்பட வேண்டிய சிலகேள்விகளோ கண்ணுக்குப்படவில்லை. இது தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு நல்லதல்ல என்பதால் நேரடியாக களத்தில்
இது நாள் வரை பார்பனர்களின் பேச்சு வழக்கும், உடல்மொழியும் அவர்களின் குள்ள நரித்தனங்களும் அவ்வப்போது படத்தில் சில காட்சிகளாகவைக்கப்படும்.
மற்றபடி, அதிககாசுக்கு ஆசைப்படும் மாமாவாகவோ, அப்பர்ட்மெண்டில் குடித்துவிட்டு அல்லது மன நிலை சரியில்லாத ஹீரோவிடம் கேள்விகேட்டுஅசிங்கப்படும் கேரக்டர், வீட்டுக்குள் வராதே என்று வேலைக்காரா பெண்ணை சொல்லும் கொடுர மாமி, இதெல்லாம் பிராமணர்களுக்கென்றே ஒதுக்கபட்டுஇருக்கும் கேரக்டர்கள்,
இதெல்லாம் ஒரளவிற்க்கு புரிகிறது - இருக்கும் சில நிமிடங்களில் ஒரு தனிப்பட்ட குணாதிசியம் இருக்கும் ஒர் கதாபாத்திரத்தைஉருவாக்கிகாட்டுவதுதென்பது அசாத்தியமான, எல்ல திரைக்கதையாளர்களலும் முடிந்த சாகசம் அல்ல எனவே ஏற்கனவே சமுதாயத்தின் மனதில்ஏற்கனவே இருக்கும் ஒரு பிம்பத்தை எடுத்தாள்வது மிகவும் எளிய வழி, அதிலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் எல்லோரையும் அப்படி பேசிவிடமுடியாது.
ஆனால் சமிபத்தில் ஒரு முழுக்கதையிலும் , பிராமணர்களின் வில்லத்தனத்தை :) பிரதானப்படுத்தி எடுத்த படம் இதுதான். என் சொந்த அனுபவத்தால்எனக்கு இந்தப்படத்தின் பல தளங்களிலும் கேள்விகள்.
முதலில் கிரிக்கெட் அரசியலை பேசுவோம்,
நான் ஒரளவிற்க்கு கிரிக்கெட் விளையாண்டவன் ஆனால் மாவட்டம், தாண்டியதில்லை எனவே மாநில அளவில் என்ன பிரச்சனைகள் என்று தெரியாதுஅதனால் தெரிந்தவர்கள் என்னை நல்வழிப்படுத்தலாம்.
என்னால் இந்த கதையை நம்ப முடியவில்லை. கடந்த 50 வருட கிரிக்கெட்டின் கடவுள்கள், கவாஸ்கரும், சச்சினுமே தங்கள் பிள்ளைகளை கிரிக்கெட்டில்நுழைக்க முடியவில்லை அவர்களுக்கு கிரிக்கெட் உலகில் இல்லாத சக்தியா?
கருணாதியின் கிரிக்கெட் பாசம் அனைவரும் அறிந்தது அவரின் பிரமண துவேஷமும் அனைவரும் அறிந்ததே- அப்படியெல்லாம் அவர் விட்டு விடுவாரஎன்ன? அவர் எந்த அளவிற்க்கு உள்ளிறங்கி பிராமணர்களை களை எடுக்க ஆசைபடுவாறென்றால்:
இரண்டு சம்பவங்கள் -- 1970 களில் அல்லது 80ன் ஆரம்பத்தில், தெரிந்த வக்கீல் குடும்பத்தில் ஒருவர் முனுசீப் கோர்ட் நீதிபதி பதவிக்கு முயற்சிக்கிறார்,தகுதி இருப்பதால் அவர் பெயர் மூன்றுமுறை பரிந்துரைக்கப்படுகிறது, முன்று முறையும் அவர் பெயர் சுழிக்கப்பட்டு “Brahmin select someone else”, என்றுcomment செய்யப்படுகிறது.
இது எப்படி தெரியும் - அப்போது இருந்த இன்னொரு நீதிமான் உறவுக்காரர் அவர் கண்டறிந்து சொல்கிறார், எனவே இவர் இது வேலைக்காதென்று திரைக்கடல் ஓடியும் திரவியம் தேட சென்று விட்டு இப்போது தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.
இன்னொரு தெரிந்தவர் , தலைமை செயலகத்தில் பிராமணன் என்பதால், பதவி உயர்வு மறுக்கப்பட்டு கோர்ட்டை நாடி பத்து வருடம் போராடி நிறுபித்து பதவியை பெறுகிறார்
இவ்வளவு ஏன் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் "பிராமணாள் ஹோட்டல்"-- சொந்தக்கடைக்கு பெயர் வைக்க முடிவதில்லை (அவர் அப்படிவைக்கக்கூடாது என்பதுதான் என் கட்சியும்).
தமிழ் நாட்டில் பிராமணன் நிலை இது தான் இப்படி இருக்க இத்தனை கண்கள் நோக்கி இருக்கும் கிரிகெட்டைபிராமணர்கள் ஆள்கிறார்கள் என்பது எந்த அளவிற்க்கு உண்மை என்று தெரியவில்லை.
எனக்குத்தெரிந்த தனிப்பட்ட முறையில்; தெரிந்த கதைகளும் இப்படி இருக்கிறது, தெரிந்தவர் "அய்யங்கார்" கிரிக்கெட் பித்தால் அலைகழிக்கப்பட்டு 35 வயதில் எங்களுருக்கு மிகவும் சாதாரண வேலைக்கு வருகிறார். கதை - ஸ்ரீனி மாமாஅவரை "நீ என் கம்பெனிக்கு ஆடு வேலை தரேன் என்று உபயோகப்படுத்திக்கொண்டு விரட்டிவிட்டார்".
நமக்கு எல்லாம் தெரிந்த இன்னொரு "அய்யங்கார்" சடகோபன் ரமேஷ், TA சேகரிடம்(இவரிடம்தான் தமிழ்நாட்டின் கிரிகெட் அதிகாரம் இருக்கிறது என்றுவிஷயம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்) முறைத்துக்கொண்டதால் இவர் இப்போது தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்
எனவே கிரிகெட்டை பணம் ஆள்கிறது அல்லது ஸ்ரீனி மாமா போன்றவர்கள் ஆள்கிறார்கள் என்றால் ஒத்துக்கொள்ளலாம், ஜாதி அதுவும் பிராமண ஜாதிஆள்கிறது என்றால், சிரிப்புத்தான் வருகிறது.
படத்தின் டைரக்டருக்கு தனிப்பட்ட முறையில் பிராமண ஜாதி மேல் எந்த வெறுப்பும் கிடையாது என்றுதான் தோன்றுகிறது , படத்தில் SPB ஒரு முக்கியமானபாடலை பாடி இருக்கிறார் அதுவும் டைரக்டர் அவர் பெயர் படத்தில் இருந்தே ஆகவேண்டும் என்று SPB யிடம் வறுற்புறுத்தி பாடவைத்ததாக பேட்டியில்சொல்கிறார் விசாரித்தால் இன்னும் நூறு பிராமணர்கள் படத்தில் வேலை செய்து இருக்க கூடும், அவர்கள் சினிமாவில் அதிகம் என்று கேள்வி.
ஆதலால் என் யூகம் எனவென்றால்,தமிழ் சமுகத்தின் பொது நம்பிக்கையான பிராமண ஆதிக்க வெறுப்பு கைகொடுக்கும் என்று நம்பி இருக்கிறார் -நம்பிக்கை வீண்போகவில்லை..
ஆனால் உண்மையில் தமிழ் நாட்டில் பிராமண ஆதிக்கம் இன்னும் இருக்கிறதா? தமிழ்நாட்டில் பிராமண ஆதிக்கம் என்பது ஒர் கவனகலைப்பு மட்டுமே.
எனக்கென்னவோ, பெரும்பாலான வெளிநாட்டினர் இன்னமும் இந்தியாவை பாம்பாட்டிகளின் நாடு என்று நினைப்பதை போல எப்போதோ மனதில்தங்கிவிட்ட ஒன்று என்றுதான் தோன்றுகிறது. இப்போதெல்லாம் அரசு அலுவலகங்களிலோ அல்லது பாங்குகளிலோ கவனித்தால் அப்படி ஒன்றும்பிராமண கூட்டம் இருப்பதாகத்தொரியவில்லை.
வக்கீல் தொழிலிருந்து முழுமையாகவே வெளியேறி விட்டார்கள், பிராமண டாக்டர்களும் அதிகம் தமிழ் நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.அரசியலில் சுத்தமாகவே இல்லை என்று சொல்லிவிடலாம்.(ஜெயலலிதா, சோ அல்லது சுப்பிரமணியன் சுவாமியைத் தவிர வேட்பாளர் தகுதியில்உங்களுக்கு வேறு யாரையாவது தெரியுமா?)
இப்போதெல்லாம், வீரமணியோ அல்லது கலைஞரோ எதையாவது, இது பூணுல் அணிந்தவர்களின் சதியென்றால், மக்களே கிண்டல்செய்யத்தொடங்கிவிடுகிறார்கள். ஆதிக்க சாதி என்பது பிராமணர்கள் மட்டுமல்ல, மற்றவர்கள் பிராமணர்களை முன்னிறுத்தி மறைந்து கொள்கிறார்கள்என்பது கொஞ்சம் பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.
உண்மையில் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கும் அல்லது கிட்டத்தட்ட அரசியல் அதிகாரமே இல்லாமலிருக்கும் பிராமணர்கள் ஆதிக்கத்தால்மற்றவர்கள் அழிகிறார்கள் என்று வந்து இந்த படம் ஜெயித்திருப்பதால் அடுத்தது இதே ரீதியில் குறைந்தபட்சம் 10 படமாவது வரும், அதில் ஒன்று ஐடி யில்பிராமணர்கள் எப்படி மற்றவர்களை அழிக்கிறார்கள் என்று வரும்..
Krish Texas
by IdlyVadai