கோடம்பாக்கம் - -சாலிகிராமம் பெயர்க்காரணம்

கோடம்பாக்கம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களின் பெயர்களைப்போலவே இதுவும் ஒரு காரணப்பெயர்!.'கோடம்' என்ற சொல்லுக்கு 'எல்லை' என்று பொருள். 'பாக்கம்' என்றால் சிற்றூர். கோடம் + பாக்கம் = கோடம்பாக்கம். ஆதிகால சென்னப்ப நாயக்கன் பட்டினத்தின் மேற்கு எல்லையைச் சார்ந்த ஓர் ஊர் இது என்பதால், இதற்கு இந்தப்பெயர் வந்தது. இது ஒரு காரணம்.
இன்னொரு விளக்கமும் உள்ளது-
'கோடா' என்ற உருதுச் சொல்லுக்கு 'குதிரை' என்றும், 'பாக்' என்பதற்கு 'இடம்' என்றும் பொருள். கோடா+பாக் = 'கோடாபாக்' என்ற தமிழ் உச்சரிப்புச் சொல் திரிந்து நாளடைவில் 'கோடம்பாக்கம்' என்று ஆகிவிட்டது.
அதிருக்கட்டும். குதிரைக்கும் கோடம்பாக்கத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?.
அது என்னவென்றால், ஆங்கிலேயரின் சென்னை வருகைக்கு முற்காலத்தில், ஆற்காட்டை ஆண்டு வந்த 'நவாப்' என்னும் முஸ்லிம் அரசர்கள், மேற்குத் திசையிலிருந்து கிழக்கே உள்ள சென்னப்ப நாயக்கன் பட்டினத்திற்கு தம் பரிவாரங்களுடன் வருவார்கள். அப்போழுதெல்லாம் நீண்ட தூரம் பயணித்து வந்த குதிரைகளிலிருந்து இறங்கி, இந்த இடத்தில் இளைப்பாறி ஓய்வெடுத்துக் கொள்வார்கள். அவர்களைச் சுமந்து ஓடிவந்த குதிரைகளுக்கும் போதிய ஓய்வு கொடுப்பார்கள். அவ்வாறு தமது குதிரைகளை நிறுத்தி வைத்து ஓய்வும், உணவும் கொடுத்த அந்தக் குறிப்பிட்ட இடம் - சிற்றூர்தான், நாளடைவில் 'கோடா பாக்' என்றும், பிறகு 'கோடம்பாக்கம்' என்றும் வழங்கலாயிற்று என்று அதன் வரலாறு கூறுகின்றது.

கோடம்பாக்கத்தைச் சார்ந்து 'ஏவி.எம்', 'பிரசாத்' போன்ற ஸ்டூடியோக்களும், கலைஞர்களும் இருக்கின்ற 'சாலிகிராமம்' என்பதும் காரணப்பெயர்தான். எப்படி என்றால் 'சாலிகன்', 'சாலியன்' என்ற சொல்லுக்கு 'கைத்தறி நெசவாளன்' என்று பொருள். ஒருகாலத்தில் இந்தப் பகுதியில் 'சாலியர்' குடும்பங்கள் நிறைந்திருந்து, நெசவுத் தொழில் நடைபெற்று வந்தது. இதனால் 'சாலிகிராமம்' என்னும் பெயர் உண்டானது. இங்கு நேர்த்தி மிக்க புடவைகள் நெய்யப்பட்டன.
60 ஆண்டுகளுக்கு முன்பு, நான் சென்னை வந்த அந்த நாட்களில் 'கோடம்பாக்கம் புடவை' புகழ் பெற்றிருந்தது. என் தாயார் அதை விரும்பி உடுத்தியதால், நான் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் நிறைய புடவை வாங்கி இருக்கிறேன். இன்றைக்கு கோடம்பாக்கமும், அதைச்சார்ந்த சாலிகிராமமும் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட அந்த அழகிய வண்ணவண்ண புடவைகள் மட்டும் இல்லை.