Tuesday, July 21, 2015

சோழர் காலம் - Part I

யார் இந்த சோழர்கள்? என்ன செய்தார்கள்?

சோழர் காலம் - Part I

தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.
சான்றுகள்
கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில்தான் எந்தவொரு சமூகம் அல்லது அரசாட்சியின் வரலாற்றையும் எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டு, தொல்பொருள், மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் முற்கால சோழர்கள் பற்றி சிறந்த சான்றுகளாக உள்ளன.
கல்வெட்டுகள்
சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை மற்றும் சோழர்கால அரசியல், பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதிக்ககப்பட்டுள்ளன. தஞ்சை பெதிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஜ்வரர் ஆலயத்தில் கல் வெட்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல முக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.
மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சி முறையைப் பற்றி திருவந்திபுரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. குடவோலை முறை, கிராம நிர்வாகம், வரி வசூல் முறை, நில வருவாய் முறை ஆகியவை குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. சில கல்வெட்டுகளில் மெய்கீர்த்திகள் எனப்படும் மன்னர்களின் வெற்றி வரலாறுகளும் காணப்படுகின்றன.
அன்பில் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டுகள், கரந்தை செப்பேடுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள் ஆகியன சோழர்களைப் பற்றிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கின்றன. சைவ மதம் அங்கு சிறப்புடன் இருந்தது குறித்து தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர்களின் சமகால அரசர்களான சேரர், பாண்டியன், இராஷ்டிர கூடர், கங்கா ஆகியோர் வெளியிட்ட கல்வெட்டுகளும் சோழர்களின் சிறப்புகள் பற்றிக் கூறுகின்றன.
நினைவுச் சின்னங்கள்:
சோழர்கால வரலாற்றை அறிந்துகொள்ள நினைவுச் சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாய் பயன்படுகின்றன. நினைவுச் சின்னங்கள் ஆலயங்களின் பகுதிகளாக உள்ளன. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராபுரத்திலுள்ள ஐராவதீஸ்வரர் ஆலயம், திருபுனவத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயம் சோழர்காலத்தின் முக்கிய நினைவுச் சின்னங்கள் ஆகும்.
நாணயங்கள்:
சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும், வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சினனமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பபடுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். சோழ அரசர்களின் காலங்களை வரிசைப்படுத்தவும், சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்துகொள்ளவும் இந்நாணயங்கள் பெரிதும் பயன்படுகின்றன.
இலக்கியம்:
சங்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் பற்றி, அறிந்துகொள்ள இலக்கியங்கள் சிறந்த சான்றுகளாக உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணம் சைவ பக்தர்களைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார். ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஒட்டக்சுத்தரின் மூன்று உலாக்கள், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் சோழர்கள் பற்றி பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன. வீர சோழியம், வநசோழ சரிதம், ஸதல புராணம், சோழ வம்ச சரிதம் ஆகிய இலக்கியங்கள் முற்கால சோழ அரசர்கள் பற்றி அறிய உதவும் சறந்த இலக்கியச் சான்றுகளாக உள்ளன.
அயல்நாட்டு சான்றுகள்:
சோழ அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையயே இருந்த உறவுகள் பற்றி இலங்கை இலக்கியமான மகாவம்சம் கூறுகின்றது. மேலும் இந்நூல் இலங்கையில் சோழர் ஆட்சி குறித்தும் கூறுகின்றது. ஐரோப்பிய பயணி மார்க்கோ போலோ, அயல்நாட்டு எழுத்தாளர் மெகஸ்தனிஸ் ஆகியோர் சோழர்களைப் பற்றி பல சுவையான தகவல்களைக் கூறுகின்றனர். அல்பெரூணி எனும் முகமதிய வரலாற்றாசிரியரும் சோழர்கள் பற்றி எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment